'அவங்க இரண்டு பேரும் சுத்த தங்கம்'...கடைசியா இந்த 'ஜாம்பவானின்'...வாழ்த்தையும் பெற்றுட்டாங்க!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 09, 2019 07:22 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி,இந்தியா வரலாற்று வெற்றியினை பதிவு செய்தது.இந்திய அணி 72 ஆண்டுகளில் முதல்முறையாக தொடரை வென்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக தொடரை வென்ற ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

 

Real Gold Stuff\": Viv Richards Posts Special Message For Kohli,Pujara

இதற்கு மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரரும்,கிரிக்கெட் ஜாம்பவானுமான விவ் ரிச்சர்ட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.குறிப்பாக கோலி மற்றும் புஜாராவை  வெகுவாக பாராட்டியுள்ளார்.புஜாராவை வெகுவாக புகழ்ந்துள அவர்,புஜாரா இந்திய அணிக்கு கிடைத்த சுத்த தங்கம் என்று பாராட்டியுள்ளார்.மேலும் என்னுடைய நண்பரான ரவிசாஸ்திரிக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

 

புஜாரா இந்தத் தொடரில் 521 ரன்களையும், பன்ட் 350 ரன்களையும், கோலி 282 ரன்களையும் குவித்து முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

Tags : #VIRATKOHLI #CRICKET #BCCI #VIV RICHARDS #CHETESHWAR PUJARA #REAL GOLD STUFF