'சச்சினுடன் விராட் கோலியை ஒப்பிடுவதா'?...டென்ஷன் ஆன ஆஸி வீரர்...எப்போதுமே சச்சின் தான் கிரேட்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 09, 2019 09:36 PM

விராட் கோலி மிக சிறந்த வீரர் தான்,ஆனால் அவரை நிச்சயம் சச்சினுடன் ஒப்பிட முடியாது என ஆஸி கிரிக்கெட் ஜாம்பவான் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

 

Virat Kohli\'s humility proves his greatness Glenn McGrath

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது 'விராட் கோலி மிகச்சிறந்த வீரர், அவர் கிரிக்கெட்டை ஆடும் விதம், மைதானத்திற்கு வெளியே அவர் நடந்து கொள்ளும் விதம் என அவரின் நற்பண்புகளை நான் மிகவும் மதிக்கிறேன்.

 

என்னுடன் அவர் பேசிய போது, நட்புடன் பழகினார், மரியாதை கொடுக்கும் மனிதராக திகழ்ந்தார், களத்துக்கும் உள்ளும் புறமும் தன்னம்பிக்கை மிக்க ஒரு மனிதர். கிரிக்கெட்டை பற்றுதலுடன் ஆடுகிறார், இந்தத் தொடரில் அணியை நன்றாக வழிநடத்தினார்.

 

சச்சினையும் விராட் கோலியையும் தற்போதைக்கு  ஒப்பிடக் கூடாது, ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் அனைத்து காலத்திற்குமான கிரேட் பிளேயர், 200 டெஸ்ட்கள், ஏகப்பட்ட ரன்கள் என்று சச்சின் செய்த சாதனைகளை நாம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இன்றய நிலைமைக்கு விராட், சச்சினை ஒப்பிடச் சொன்னால், விராட் இன்னும் சச்சின் ஆகவில்லை என்றுதான் கூற வேண்டும்.மேலும் சச்சினிடமிருந்து விராட் நிறைய கற்று கொள்ள வேண்டும் என கூறினார்.

Tags : #VIRATKOHLI #CRICKET #GLENN MCGRATH