'அப்படி என்ன லிட்டில் மாஸ்டர் வாழ்த்து சொன்னாரு'...வைரலாகும் சச்சினின் ட்விட்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Dec 12, 2018 08:13 PM
Sachin Calls Thalaiva and wishes for Rajinikanth Birthday

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு பலரும் தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த வகையில் இந்திய கிரிக்கெடின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்தை வாழ்த்தி சச்சின் பதிவிட்ட ட்விட் தற்போது வைரலாகி வருகிறது.

 

40 ஆண்டுகளாக தனக்கென இந்திய திரையுலகில் தனி இடத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த்  தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.அவருக்கு  திரையுலக நடிகர்கள், நடிகைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்,சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஹாப்பி பர்த்டே தலைவா என பாசமுடன் பதிவிட்டுள்ளார்.மேலும்  வரும் ஆண்டு உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், ஆசிர்வதிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் ரஜினிகாந்த் சார்” என தெரிவித்துள்ளார்.

Tags : #RAJINIKANTH #BIRTHDAY #SACHIN TENDULKAR