'அவதான் என் உலகம்'... ரொமான்டிக் 'புகைப்படம்' வெளியிட்ட மஹத்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 30, 2018 04:26 PM
Mahat\'s romantic post for his girlfriend Prachi

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மஹத் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார்.இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மஹத் காதலைச்சொன்னதால் இனி மஹத்துக்கும்  எனக்கும் எந்த தொடர்புமில்லை என, அவரது காதலி பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

 

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த பின்னர் சிம்பு,ரம்யா ஆகியோரை மஹத் சந்தித்தார். ஆனால் பிராச்சியை அவர் இன்னும் சந்திக்கவில்லை.

 

இந்தநிலையில் தனது காதலி பிராச்சியுடன் இருப்பது போல ஒரு ரொமாண்டிக் புகைப்படத்தை வெளியிட்டு, ''பிராச்சி என் வாழ்க்கையின் காதல். அவள் தான் என் உலகம்,'' என மஹத் தெரிவித்துள்ளார்.