'இது முடிவல்ல'.. மஹத்துக்கு 'அட்வைஸ்' செய்த காயத்ரி ரகுராம்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 26, 2018 07:37 PM
Biggboss2 Tamil: Stay strong Mahat says Gayathri Raguramm

பிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் மஹத் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்றைய இரவு தான் தெரியவரும்.

 

இந்தநிலையில் மஹத்துக்கு, பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை காயத்ரி ரகுராம் அட்வைஸ் செய்துள்ளார்.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம், ''பிக்பாஸ் ஒரு விளையாட்டு நிகழ்ச்சி மட்டுமே மகத். உங்களின் உண்மையான நண்பர்கள் வெளியே உள்ளனர். உங்களுக்கு உண்மை எதுவென்று தெரியவில்லை. உங்களின் திறமையும், எதிர்காலமும் உங்கள் கையில் உள்ளது. அதை நீங்கள் வெளியே பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தலாம்.

 

பிக்பாஸ் ஒரு வாய்ப்பு மட்டுமே. அது தவறாக போனால் இரண்டாவது வாய்ப்பு உண்டு, இது முடிவு அல்ல.விளையாட்டு நிகழ்ச்சியில் செய்யப்படும் தவறுகளை விட, நிஜவாழ்க்கையில் சில மனிதர்கள் அதிக தவறுகளை செய்கின்றனர். மோசமான கருத்துக்களால் நாம் பலவீனமாகி விட மாட்டோம். அதேபோல நமது வளர்ச்சியையும் தடுக்க முடியாது,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.