துணிகளை வீசி எறிந்து 'டேனியை அடிக்கும் மஹத்'.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 22, 2018 12:35 PM
Biggboss 2 Tamil August 22nd Promo Video 2

இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் மஹத்-மும்தாஜை வம்பிழுப்பது போல காட்சிகள் இருந்தன. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மஹத்,டேனி மீது முட்டையை உடைத்து ஊற்றுகிறார். அதைத் தொடர்ந்து தனது ஆடைகளின் மேல் உள்ள கறைகளை நீக்க, டேனி பாத்ரூம் உள்ளே சென்று உடைகளைக் கழற்றுகிறார்.

 

அப்போது அங்கு வரும் மஹத் அவரிடம் சண்டை போட்டு என்ன அட்ரா பாக்கலாம் என சண்டைக்கு செல்கிறார். சென்றாயன் இதனைத் தடுக்க முயல துணிகளை வீசி எறிந்து மஹத்,டேனியை அடிப்பது போல காட்சிகள் உள்ளன.சத்தம் கேட்டு அங்கு பிற போட்டியாளர்கள் வருகின்றனர். தொடர்ந்து அங்கு வரும் மும்தாஜ் பிக்பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் என சொல்ல, பதிலுக்கு பாலாஜி அப்போ இந்த கடியெல்லாம்? என கேட்பது போல காட்டப்படுகிறது.

 

ஏற்கனவே மும்தாஜை தொடர்ந்து வெறுப்பேற்றி வரும் மஹத், தற்போது டேனி உள்ளிட்டவர்களிடமும் தனது கோபத்தினை காட்டத் தொடங்கியுள்ளார். இதனால் இந்த வாரமாவது கமல்,மஹத்தைக் கண்டிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.