'கூச்சமே இல்லாம சொல்லிக்கிறாங்க'..மும்தாஜை நேரடியாகத் தாக்கும் மஹத்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 16, 2018 05:37 PM
Biggboss 2 Tamil August 16th Promo video 3

பிக்பாஸ் வீட்டில் சமீபகாலமாக மஹத் மிக அதிகமான கோபத்தினை சக போட்டியாளர்கள் மீது வெளிப்படுத்தி வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் டேனியுடன் அவர் கைகலப்பில் ஈடுபட்டார். இவரின் கோபத்தினைப் பார்த்து சென்றாயனே ஒருமுறை நல்ல டாக்டரா போய் பாரு என்று அட்வைஸ் செய்திருந்தார்.

 

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் சிறந்த போட்டியாளர் என மும்தாஜ் தன்னை நேரடியாக சொல்லிக்கொள்கிறார் என மஹத் கோபப்படுகிறார். பதிலுக்கு மும்தாஜ் நான் என்ன பண்ணனும், என்ன பண்ணக்கூடாதுன்னு எனக்குத் தெரியும்.நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம் என்று மஹத்துக்கு பதிலடி கொடுக்கிறார்.

 

இன்று வெளியான 3 ப்ரோமோ வீடியோக்களிலும் தொடர்ந்து சண்டைகள் இருப்பதால், இன்றிரவு பயங்கர சண்டைகள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.