'முடிஞ்சா தனியா வா'.. ஜனனியை எச்சரிக்கும் யாஷிகா கூட்டணி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 16, 2018 12:58 PM
Biggboss 2 Tamil August 16th Promo Video 2

பிக்பாஸ் வீட்டில் தற்போது 2 அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ஒரு அணிக்கு மும்தாஜ் தலைவராகவும்,மற்றொரு அணிக்கு பாலாஜி தலைவராகவும் உள்ளனர்.

 

இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் சென்றாயன் ஐஸ்வர்யா தலைமுடியைப் பிடித்து இழுப்பது போலவும், பதிலுக்கு ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் அவரிடம் சண்டை போடுவது போலவும் காட்சிகள் வெளியாகின.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் யாஷிகா-ஐஸ்வர்யா இருவரும் எதிர் அணியினரின் பொம்மைகளைத் தூக்குகின்றனர். இதனால் எதிர் அணியினர் கோபம் கொள்ள பதிலுக்கு நீ தனியா வா என ஐஸ்வர்யா,ஜனனியிடம் எகிறுகிறார்.தொடர்ந்து யாஷிகாவும் அப்போ தெரியலையா? என எதிர் அணியினரிடம் கத்துகிறார்.

 

இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல பஞ்சாயத்துகள் மற்றும் இரு அணியினருக்கும் சண்டைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.