பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவரா?.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Home > News Shots > தமிழ்

By |
Biggboss 2 Tamil: Who is Eliminated this week? Read Here

பிக்பாஸ் வீட்டில் ஜனனி,பொன்னம்பலம்,சென்றாயன் ஆகிய மூவரும் கடந்த வாரம் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர்.இதனால் இவர்கள் மூவரில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

 

இந்தநிலையில்பிக்பாஸ் வீட்டுக்குள் நேரடியாக சென்ற கமல், வெளியேறும் போட்டியாளரின் பெயரை ஜனனி,சென்றாயன்,பொன்னம்பலம் ஆகிய 3 பேரில் ஒருவரை படிக்கச் சொன்னார்.தொடர்ந்து நானே படிக்கிறேன் என்ற பொன்னம்பலம் கார்டினுள் இருந்த அந்த போட்டியாளரின் பெயரை படிக்க,அதில் அவரின் பெயரே இருந்தது. இதன் மூலம் தொடர்ந்து ரசிகர்களால் காப்பாற்றப்பட்டு வந்த 'சித்தப்பா' பொன்னம்பலம், இன்று வீட்டைவிட்டு வெளியேறுவது உறுதியாகியுள்ளது.

 

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் குறைவாக உள்ளதாலும், நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து இருப்பதாலும் வரும் நாட்களில் 'வைல்ட் கார்டு எண்ட்ரி' போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வலது காலை எடுத்து வைத்து நுழைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.