'டிராமா குயின்'.. மும்தாஜை தொடர்ந்து வெறுப்பேற்றும் மஹத்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 22, 2018 10:24 AM
biggboss 2 Tamil: August 22nd Promo Video 1

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து மும்தாஜை,மஹத் டார்கெட் செய்து வருகிறார். அங்கு உள்ள மற்ற போட்டியாளர்களை விட,மும்தாஜிடம் மட்டுமே அவர் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார்.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் பாகுபலி படத்தில் வரும்,ராஜமாதா போலவும் டேனி கட்டப்பா போலவும் உடையணிந்து உள்ளனர்.

 

அதில் மும்தாஜ் வெளியில் ஒரு சேரில் அமர்ந்து இருக்கிறார். அப்போது அங்கு வரும் மஹத் டிராமா குயின், தக்காளி என்று அழைத்து அவரிடம் வம்பு இழுக்கிறார். இதனால் இன்றைய இரவு பிக்பாஸ் வீட்டில் பல சண்டைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.