பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் 'நம்பகத்தன்மையை' இழந்து விட்டது

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 21, 2018 12:26 PM
Actor Ganesh Venkatram Slams Biggboss 2 Tamil

உன்னைப்போல ஒருவன், தனி ஒருவன் படங்களில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த கணேஷ் வெங்கட்ராமுக்கு, கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது.மேலும் கடந்த சீசனில் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராகவும் கணேஷ் தேர்ந்தேடுக்கப்பட்டார்.

 

இந்தநிலையில் சமீபத்தில் அவர் ரசிகர்களுடன் ட்விட்டரில் சாட் செய்தார். அப்போது பிக்பாஸ் குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

 

அதில், ''சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக நான் கருதுகிறேன்.பிக்பாஸ் போன்ற ஒரு ஷோ ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு மாறாக சர்ச்சையான விஷயங்கள் டிஆர்பிக்காக உருவாக்கப்படுவதைப் பார்த்து நான் திகைத்துப் போனேன்.

 

தனிப்பட்ட முறையில் பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு ஏமாற்றமாக உள்ளது. மக்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டது. மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் தேவைப்படும் மாற்றங்களை நிகழ்ச்சியில் செய்வார்கள் என நம்புகிறேன்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.