திமுக-வின் புதிய தலைவர் தேர்தல்.. வாரிசுகளா.. விசுவாசிகளா.. ஜெயிக்கப்போவது யார்?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Aug 21, 2018 11:36 AM
DMK to elect new leader

திமுக தலைவர் மு.கருணாநிதி கடந்த இரு வாரத்துக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். மறைந்த அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணாவின் நினைவிடத்தில் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் பெரியார் முதலானோரின் வழித்தோன்றலாக பார்க்கப்பட்டது. அதன் பின் கருணாநிதி, எம்.ஜி.ஆர் என இருவரும் அக்கட்சியில் இருந்தனர். பின்னர் திமுக-வை கலைஞர் கைப்பற்ற, எம்ஜிஆர் வெளிவந்து அதிமுக-வை உருவாக்கினார். 

 

அதன் பின் ஒற்றை ஆளாக கலைஞர் கருணாநிதி திமுக-வின் தலைவராக இருந்து வழிநடத்தினார். சட்டமன்றத் தேர்தலில் 13 முறை வெற்றியும், ஏறக்குறைய 25  ஆண்டுகள் முதல்வராகவும், 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ள கலைஞரின் ‘பிரதான’ தொகுதி திருவாரூர். 

 

அங்கு அவருக்கு பிறகு களமிறங்க போகும் திமுக பிரபலம் யார்? கட்சியின் மூத்த உறுப்பினர்களா? இளைய வாரிசுகளா? என்பன போன்ற பலதரப்பட்ட கேள்விகளுக்கு வரும் ஆகஸ்ட் 28ல் முடிவு கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆம், திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் அன்றைய தினம் நிகழவுள்ளது. அதில் திமுக தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு அன்று தேர்தல் நடக்கவுள்ளது. காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடக்கவுள்ள, இந்தத் தேர்தலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைவர் பதவி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : #DMK #MKSTALIN #MKARUNANIDHI #DMKNEWLEADER #CNANNADURAI