மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவாரா அழகிரி? கூடுகிறது திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் !

Home > News Shots > தமிழ்

By |
DMK executive committee meeting on august 14

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். பின்னர் புதனன்று அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

 

இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் இன்று  காலை சந்தித்தார்.அதன் பின்பு கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது.அதன்படி வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதி காலை 10 மணி அளவில்  செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடத்துவது தொடர்பாகவும், கட்சியின் பொதுக்குழுவை விரைவில் கூட்டுவது தொடர்பாகவும் இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுமென்று தெரிகிறது.

 

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு யார் என்பதை தீர்மானித்தல், மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்தல் உள்ளிட்ட விஷயங்களுக்கு கட்சியின் பொதுக்குழு கூடிதான் முடிவெடுக்க வேண்டும். எனவே அதை தீர்மானித்தல் மிகவும் முக்கியமான விஷயமாகும்.

Tags : #MKSTALIN #DMK