’வெட்கத்தைவிட்டு சொல்கிறேன்.. முதல்வரின் கையைப் பிடித்து கெஞ்சி’..செயற்குழுவில் ஸ்டாலின் உருக்கம்!

Home > News Shots > தமிழ்

By |
I held the hands of CM and begged MK Stalin reveals at meeting

திமுக தலைவராகவிருக்கும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நிகழ்ந்த திமுகவின் செயற்குழுவில் தழுதழுத்தபடி பேசியுள்ளார். அப்போது,  ‘அனைவரும் தலைவரை இழந்திருக்கிறீர்கள்; நான் தலைவரை மட்டுமல்ல, தந்தையையும் இழந்து நிற்கிறேன்’என்று கூறினார்.

 

மேலும் அண்ணாவின் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே தன் அப்பாவின் ஆசை,அவரின் ஆசையை நிறைவேற்ற எதையும் இழக்க தயார் என கூறி முதல்வரை சந்தித்தாகவும் கூறியவர், ‘வெட்கத்தை விட்டு சொல்கிறேன், முதல்வரின் கையை பிடித்து அப்பாவை அடக்கம் செய்ய இடம் கேட்டேன். ஆனால் விதிமுறைப்படி இடம் கொடுக்க வாய்ப்பில்லை, பார்க்கலாம்’என முதலமைச்சர் கூறி அனுப்பினார்.