இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு 'வெளியேறிய' போட்டியாளர் யார் தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 19, 2018 09:35 PM
Biggboss 2 Tamil: Who is Eliminated this week? Read Here

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டேனி,வைஷ்ணவி,ஜனனி,ரித்விகா,சென்றாயன் ஆகிய ஐவரும் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் நேற்றிரவு ரித்விகா காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார்.

 

இதனால் மீதமுள்ள நால்வரில் வெளியே போகப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சீக்ரெட் ரூமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வைஷ்ணவி, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக கமல் அறிவித்தார்.

 

சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் டேனி வெளியேறுவார் என்றே பெரும்பாலோனோர் வாக்களித்தனர். ஆனால் வலிமையான போட்டியாளர்களில் டேனியும் ஒருவராக திகழ்வதால், யாஷிகா போல டேனியும் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.