'எனக்கு ஆதரவளியுங்கள்'.. வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 23, 2018 04:50 PM
Actress Vijaylakshmi\'s wildcard entry in Biggboss House

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சரியாக 65 நாட்களுக்குப்பின் வைல்டு கார்டு எண்ட்ரி வழியாக, 'சென்னை -28' புகழ் ஹீரோயின் விஜயலட்சுமியை இன்று வீட்டுக்குள் களமிறக்கி  உள்ளனர்.

 

அப்படத்தில் இடம்பெற்ற 'மேலே ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு' பாடல் ஒளிபரப்பாக, பிக்பாஸ் வீட்டின் கதவு திறக்கிறது. பாடலுக்கு ஆடிக்கொண்டே உள்ளே வரும் விஜயலட்சுமியுடன் இணைந்து, போட்டியாளர்களும் ஆடுவது போல காட்சிகள் உள்ளன.

 

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லுமுன் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதில், ''பிக்பாஸ் வீட்டுக்குள்ள போக போறேன். என்னை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து இருப்பீர்கள். பிக்பாஸ் வீட்டுக்குள் நான் நானாக இருக்க போறேன். விஜயலட்சுமியாக என்னை பார்க்க போகிறீர்கள்.எனக்கு ஆதரவளியுங்கள் உங்களின் அன்பும்,ஆதரவும் கண்டிப்பாக எனக்குத் தேவை,'' என தெரிவித்துள்ளர்.