தண்ணி வேணுமா?குப்ப வேணுமா?.. பாலாஜியை வெறுப்பேற்றும் வெஷபாட்டில்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 22, 2018 01:19 PM
Biggboss 2 Tamil August 22nd Promo Video 3

இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் மஹத்-மும்தாஜை வம்பிழுப்பது போல காட்சிகள் இருந்தன. தொடர்ந்து வெளியான 2-வது வீடியோவில் மஹத்-டேனியை அடிப்பது போல காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில், ஐஸ்வர்யா-பாலாஜி இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ஜனனி-ரித்விகா இருவரும் 'ராணி மகாராணி ராஜ்ஜியத்தின் ராணி' என்று பாட்டுப்பாடி நடித்துக் காட்டுகின்றனர். தொடர்ந்து ஜனனி பாலாஜியிடம் தண்ணி வேணுமா? இல்ல குப்ப வேணுமா? என  வெறுப்பேற்றுவது போலகாட்டப்படுகிறது.

 

சர்வாதிகாரி டாஸ்க்கின் போது ஐஸ்வர்யா-பாலாஜி தலையில் குப்பையைக் கொட்டியதை நினைவுபடுத்தும் வகையில் ஜனனி-ரித்விகா இருவரின் நடவடிக்கைகளும் இருப்பதால், இன்றிரவு மீண்டும் பிக்பாஸ் வீட்டில் அது தொடர்பான பஞ்சாயத்துகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.