65 நாட்களுக்குப்பின் வைல்ட்கார்டு எண்ட்ரி: உள்ளே வந்தது யார் தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 23, 2018 12:13 PM
Biggboss 2 Tamil August 23rd Promo Video 2

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சரியாக 65 நாட்களுக்குப்பின் வைல்டு கார்டு எண்ட்ரி வழியாக, 'சென்னை -28' புகழ் ஹீரோயின் விஜயலட்சுமியை இன்று வீட்டுக்குள் களமிறக்கி  உள்ளனர்.

 

அப்படத்தில் இடம்பெற்ற 'மேலே ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு' பாடல் ஒளிபரப்பாக, பிக்பாஸ் வீட்டின் கதவு திறக்கிறது. பாடலுக்கு ஆடிக்கொண்டே உள்ளே வரும் விஜயலட்சுமியுடன் இணைந்து, போட்டியாளர்களும் ஆடுவது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் இனிவரும் நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.