பிக்பாஸ் பார்க்கிறீர்களா?.. ரசிகரின் கேள்விக்கு 'ஓவியா'வின் பதில் இதுதான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 24, 2018 03:55 AM
I\'m not watching Biggboss 2: Oviya

கடந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை ஓவியா பிக்பாஸ் 2 நிகழ்ச்சி குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

 

பிக்பாஸ் முதல் சீசனில் மிகவும் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக அறியப்பட்ட நடிகை ஓவியா, தனிப்பட்ட காரணங்களால் அந்த வீட்டைவிட்டு குறுகிய நாட்களிலேயே வெளியேறி விட்டார்.

 

வெகு சீக்கிரமாக வெளியேறினாலும் அந்த நிகழ்ச்சியின் மூலமாக ஓவியாவுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது. அதன் தொடர்ச்சியாக இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும், ஓவியா சிறப்பு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று வந்தார்.

 

இந்தநிலையில் தனது ரசிகர்களிடம் ட்விட்டரில் நேற்று ஓவியா சாட் செய்தார். அப்போது ரசிகர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த உங்களின் கருத்து என்ன? என கேட்க, பதிலுக்கு ஓவியா,'' நோ கமெண்ட்ஸ். நான் அதனை பார்ப்பதில்லை,'' என தெரிவித்துள்ளார்.