'தீதும்,நன்றும் பிறர் தர வாரா'... ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படும் மஹத்?

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 26, 2018 11:13 AM
Biggboss 2 Tamil August 26th Promo Video 1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று மஹத் குறித்த விசாரணைகள் மற்றும் புகார்கள் அதிகமாக இருந்தன.அதேபோல நேற்றைய விசாரணையிலும் கமல்,மஹத் மீது தனது கோபத்தைக் காட்டியிருந்தார்.

 

இந்தநிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில், கமல் தனது கையில் இருந்து ரெட் கார்டை எடுத்துக் காட்டுகிறார். அப்போது 'தீதும்,நன்றும் பிறர் தர வாரா' என்றும் கமல் கூறுகிறார்.

 

இதனால் பிக்பாஸ் வீட்டைவிட்டு இன்று மஹத் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பிக்பாஸ் வீட்டைவிட்டு மஹத் வெளியேற்றப் பட்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

வலிமையான போட்டியாளர்களை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ், மஹத்தின் அட்டகாசங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டாரா? என்பது இன்று இரவுதான் தெரியவரும்.