பிக்பாஸ் டைட்டிலை 'வெல்லப்போவது' இவர்தான்.. அடித்துச்சொல்லும் ஆர்த்தி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 26, 2018 02:31 PM
Biggboss 2 Title winner is either Mumtaz or Sendrayan-Actress Harathi

பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது வெகுவாக சூடுபிடித்துள்ளது. இதனால் டைட்டிலை வெல்லப்போவது யார்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

தற்போது பிக்பாஸ் வீட்டின்  உள்ளே இருக்கும் டேனி, மும்தாஜ், ரித்விகா, ஜனனி, யாஷிகா என அனைவரும் வலிமை நிறைந்த போட்டியாளர்களாகவே உள்ளனர். இதனால் இறுதிச்சுற்றுக்கு வரப்போகும் போட்டியாளர்கள் யார்? என்ற ஆர்வம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

 

இந்தநிலையில் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஆர்த்தி பிக்பாஸ் டைட்டிலை மும்தாஜ்-சென்றாயன் இருவரில் ஒருவர் வென்றிட வாய்ப்புகள் அதிகம், என தனது கணிப்பினை தெரிவித்திருந்தார்.

 

அதற்கு ரசிகர் ஒருவர் ரித்விகா தான் வெல்வார், அவருக்கு எல்லா தகுதிகளும் உள்ளது  என தெரிவித்தார்.பதிலுக்கு ஆர்த்தி, ''ரித்விகா எனது நல்ல தோழி. ஆரம்ப நாட்களில் அவர் பாதுகாப்பாக விளையாடினார். மற்றவர்களைப் பற்றி கணிக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.
 

ஆனால் முதல் நாளில் இருந்து மும்தாஜ் முழு ஆற்றலுடன், மிகவும் வலிமையான போட்டியாளராக உள்ளார். அவர் எப்போதும் பாதுகாப்பாக இதுவரை விளையாடியதில்லை. மேலும் அவர் யாரையும் சார்ந்து இருக்கவில்லை,'' என தெரிவித்துள்ளார்.