'மத்தவங்க வீக்னஸ ஆயுதமா யூஸ் பண்ணாதீங்க'.. மும்தாஜை வெறுப்பேத்தும் நித்யா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 30, 2018 01:55 PM
Biggboss 2 Tamil August 30th Promo Video 3

பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரீஸ் டாஸ்க்  வருகிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்களும்,நண்பர்களும் வீட்டுக்குள் வந்து போட்டியாளரை சந்தித்து செல்கின்றனர்.

 

அந்தவகையில் பாலாஜி மனைவி நித்யா மற்றும் அவரது குழந்தை போஷிகா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது போல காட்சிகள் வெளியாகியுள்ளன. உள்ளே வரும் நித்யா, ''நான் உன்ன அழ வச்சிட்டேன் ஸாரி,'' என்று அழுகிறார்.பதிலுக்கு பாலாஜியும் சமாதானம் சொல்ல,இருவரும் மகிழ்ச்சியுடன் சிரிக்கின்றனர்.

 

தொடர்ந்து போட்டியாளர்களிடம் பேசும் நித்யா, ''நான் வெளில போய் நிகழ்ச்சிய பார்த்தேன்.மும்தாஜ் நீங்க ரொம்ப ஸ்ட்ராங்கான பர்சன். ஆனா ரெண்டு சைடு உள்ள நியாயத்தையும் தெரிஞ்சு பேசினா நல்லாருக்கும்.

 

உங்களோட ஸ்ட்ராங் பாயிண்டை ஆயுதமா யூஸ் பண்ணுங்க. அடுத்தவங்க வீக்னஸ்ஸ  யூஸ் பண்ணாதீங்க,'' என்று மும்தாஜுக்கு அட்வைஸ் செய்வது போல காட்சிகள் உள்ளன.

 

இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் இன்றிரவு விக்ரமன் பட மோடிலிருந்து வெளியே வருவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.