ரெட்கார்டு எலிமினேஷன்: மஹத்தை கன்னத்தில் அறைந்த சிம்பு.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Behindwoods News Bureau | Aug 28, 2018 01:42 AM
Watch Video: Mahat gets welcomed by Simbu

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மஹத் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு நேற்று வெளியேறினார்.இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய தன்னை தனது நண்பன் சிம்பு எப்படி வரவேற்றார் என்பதை, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மஹத் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

 

அதில், ''மஹத்தை ஒருவர் பின்னாடி இருந்து பிடித்துக்கொள்ள சிம்பு அவரது கன்னத்தில் அடிப்பது போல,'' காட்சிகள் உள்ளன. தொடர்ந்து என்ன அடிச்சாலும் வலிக்காது ஏன்னா நீ அவ்வளவு அடி வாங்கிருக்கடா என்று சிம்பு மஹத்திடம் சொல்கிறார்.பின்னர் இருவரும் கட்டித்தழுவிக் கொள்கின்றனர்.

 

சிம்பு என்னை இப்படித்தான் வரவேற்றார் என தெரிவித்திருக்கும் மஹத், லவ் யூ டா என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.