ஒரு ஹீரோவின் வாழ்க்கையை கெடுத்து விட்டீர்களே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 27, 2018 11:14 AM
Both girls spoiled one Hero life-Actress Harathi

ரெட்கார்டு எலிமினினேஷன் வழியாக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய மஹத்துக்கு, சமூக வலைதளங்களில் ஆதரவுக்குரல்கள் அதிகரித்து வருகின்றன.

 

அந்தவகையில் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளரும், நடிகையுமான ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மஹத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் கூறுகையில், ''சிறந்த நடிப்பிற்கான விருதை யாஷிகா-ஐஸ்வர்யாவுக்கு கொடுக்கலாம். முதலைக்கண்ணீர் வடிக்காதீர்கள். அடுத்த வாரம் டபுள் எலிமினேஷன் செய்ய சொல்லிடலாம். ஜோடியா வெளிய போய்டுங்க. மஹத் நீ பிராச்சி கிட்ட பேசு அவள் உன்னை எலிமினேட் செய்ய மாட்டாள்.

 

இரண்டு பெண்கள் ஒரு ஹீரோவின் வாழ்க்கையை கெடுத்து விட்டீர்கள். ஆனால் மஹத் இது எல்லாமே உனது நல்லதிற்கு தான். இதற்குப்பின் பெண்களிடம் மிகவும் கவனமாக நடந்து கொள்வாய்.பிராச்சி உன்னைப் புரிந்து கொள்வாள் என நம்புகிறேன்.இதற்குப்பின் உனது வாழ்க்கை அற்புதமாக மாறும். வாழ்க்கை குறித்த பாடத்தை நீ புரிந்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன்,'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.