மும்தாஜைத் தொடர்ந்து 'கண்ணழகியை' கண்கலங்க வைத்த பிக்பாஸ்.. வீடியோ உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 28, 2018 01:18 PM
Biggboss 2 Tamil: August 28th Promo Video 3

முதல்  ப்ரோமோ வீடியோவில் மும்தாஜ் வீட்டில் இருந்து, அவரது குடும்பத்தினர் வருவது போலவும் மும்தாஜ் பிரீஸ் நிலையில் இருக்கும்போதே அவரது குடும்பத்தினர் வெளியே செல்வதால், அதனைக்கண்டு அவர் உடைந்து கதறுவது போல காட்சிகள்இருந்தன

 

தொடர்ந்து வெளியான 2-வது ப்ரோமோ வீடியோவில் , ''யாரைப்பற்றியும் முன்னால் விட்டு பின்னால் பேசாதே.இன்னும் ஒரு தோழியாக எனது ஆதரவினை உனக்கு அளித்து, உனது பக்கம் நிற்கிறேன்,'' என்று நித்யா,பாலாஜிக்கு அட்வைஸ் செய்வது போல காட்டப்பட்டது.

 

இந்தநிலையில், சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜனனியின் அம்மா,தங்கை இருவரும் வீட்டுக்குள் வருவது போலவும்,அவர்களைக் கண்டு ஜனனி கண்கலங்குவது போலவும் காட்சிகள் உள்ளன.

 

சரியாக அவர்கள் உள்ளே வரும்போது, பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் பிரீஸ்சில் இருக்குமாறு கட்டளையிடுகிறார்.இதனால் நீண்ட நாட்களுக்குப்பின் பிக்பாஸ் வீடு விக்ரமன் படம் போல ஜாலியாக இருக்கிறது.