இந்த உலகத்துல உள்ள 'எல்லாரையும்' விட...உன்ன அதிகமா 'லவ்' பண்றேன் பிராச்சி: மஹத் உருக்கம்

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 28, 2018 02:54 AM
seriously love you more than anyone in the whole world-Mahat

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான மஹத் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டைவிட்டு நேற்று வெளியேறினார்.இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

 

இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மஹத் தனது காதலி பிராச்சி மிஸ்ரா குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

 

அதில் 'உங்க எல்லாரோட அன்புக்கும் நன்றி. எனக்கு ஆதரவு அளித்ததற்கும், என்னைப் புரிந்து கொண்டதற்கும் நன்றி.உங்களுக்காக ஒரு உணர்ச்சிகரமான குறும்படம். இதன் ஒரிஜினலை விரைவில் வெளியிடுவேன்.இந்த உலகத்துல இருக்கற எல்லோரையும் விட உன்ன அதிகமா லவ் பண்றேன் பிராச்சி மிஸ்ரா,'' என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

 

பிக்பாஸ் வீட்டில் யாஷிகாவிடம் மஹத் காதலைச்சொன்னதால் இனி மஹத்துக்கும்  எனக்கும் எந்த தொடர்புமில்லை என, அவரது காதலி பிராச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.