'பாலாஜியிடம் எச்சரிக்கையாக இரு'.. ஜனனி அம்மாவின் அட்வைஸை உண்மையாக்கிய பாலாஜி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 29, 2018 12:37 PM
Biggboss 2 Tamil: August 29th Promo Video 2

இன்று காலை வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் அம்மா வீட்டுக்குள் வருவது போலவும், பாலாஜியின் கையைப் பிடித்துக்கொண்டு அவர் மன்னிப்பு கேட்பது போலவும் காட்சிகள் இருந்தன.

 

இந்தநிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோ வீடியோவில் டேனியின் வீட்டில் இருந்து அவரது உறவினர்கள் வருவது போலவும்,பிரீஸ் நிலையில் இருக்கும் டேனி ஓடிவந்து அவர்களை கட்டிபிடித்துக் கொள்வது போலவும்  காட்சிகள் உள்ளன.

 

தொடர்ந்து பாலாஜி-மும்தாஜ் இருவரும் வீட்டினுள் இருந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது மற்ற போட்டியாளர்கள் வீட்டில் இருந்து உறவினர்கள் வருகையில், ஜனனி அவர்களிடம் ஈடுபாட்டுடன் பேசுவதில்லை என்று பாலாஜி சொல்கிறார்.

 

மேலும் ஜனனியின் அழுகையை போலிக்கண்ணீர்-நீலிக்கண்ணீர் என்று பாலாஜி விமர்சிப்பது போல காட்சிகள் இருக்கின்றன.

 

நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஜனனியின் அம்மா பாலாஜியிடம் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி, ஜனனிக்கு அறிவுரை சொன்னது குறிப்பிடத்தக்கது.