'என் பொண்ண மன்னிச்சிடுப்பா'.. பாலாஜியின் கையைப் பிடித்துக்கொண்டு கலங்கிய ஐஸ் அம்மா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 29, 2018 10:35 AM
Biggboss 2 Tamil: August 29th Promo Video 1

பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களின் பெற்றோர்கள் வருவதால், வீடே விக்ரமன் படம் போல கலகலப்பாக இருக்கிறது.

 

இந்தநிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யாவின் அம்மா வீட்டுக்குள் வருவது போல காட்சிகள் உள்ளன. தொடர்ந்து உள்ளே வரும் அவர் பாலாஜியின் கையைப் பிடித்துக்கொண்டு மன்னிப்பு கேட்கிறார்.

 

பதிலுக்கு பாலாஜி உங்க பொண்ணு என்மேல குப்பை கொட்டல, பூ தான் கொட்டுச்சு என்று ஆறுதல் கூறுகிறார்.சர்வாதிகாரி டாஸ்க்கில் பாலாஜியின் மேல் ஐஸ்வர்யா குப்பையைக் கொட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.