'9 வருஷத்துல நீ அழுது நான் பார்த்ததில்ல'.. பாலாஜியிடம் கண்கலங்கிய நித்யா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 30, 2018 01:20 PM
Biggboss 2 Tamil: August 30th Promo Video 2

பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரீஸ் டாஸ்க்  வருகிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்களும்,நண்பர்களும் வீட்டுக்குள் வந்து போட்டியாளரை சந்தித்து செல்கின்றனர்.

 

அந்தவகையில் பாலாஜி மனைவி நித்யா மற்றும் அவரது குழந்தை போஷிகா இருவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவது போல காட்சிகள் வெளியாகியுள்ளன. உள்ளே வரும் நித்யா, ''நான் உன்ன அழ வச்சிட்டேன் ஸாரி,'' என்று அழுகிறார்.

 

பதிலுக்கு பாலாஜி ஏ என்ன இது. அழுகாத என்று சொல்கிறார். தொடர்ந்து பாலாஜியிடம் பேசும் நித்யா, '' நேத்து நீ அழுதத என்னால பொறுத்துக்க முடியல.9 வருஷத்துல நீ அழுது நான் பார்த்தது இல்ல.பர்ஸ்ட் டைம் உன் கண்ல இருந்து நான் தண்ணிய பார்த்தேன்,'' என்று சொல்கிறார்.

 

சக போட்டியாளர்களும் பாலாஜி மாறிவிட்டதாக சொல்ல நித்யா-பாலாஜி இருவரும் மகிழ்ச்சியுடன் சிரிப்பது போல காட்சிகள் உள்ளன.இதனால் பிக்பாஸ் வீடே விக்ரமன் படம் போல காட்சியளிக்கிறது.