'நான் அப்பா ஆகிட்டேன்'.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சென்றாயன்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 30, 2018 10:25 AM
Biggboss 2 Tamil: August 30th Promo Video 1

பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரீஸ் டாஸ்க்  வருகிறது. இதில் போட்டியாளர்களின் உறவினர்களும்,நண்பர்களும் வீட்டுக்குள் வந்து போட்டியாளரை சந்தித்து செல்கின்றனர்.

 

அந்த வரிசையில் சென்றாயன் மனைவி கயல்விழி தனது கணவரை சந்திக்க பிக்பாஸ் வீட்டுக்குள் வருவதுபோல காட்சிகள் உள்ளன. உள்ளே வரும் கயல்விழி சென்றாயன் காதருகே சென்று நீ அப்பா ஆகிட்ட என்று கூற இதனைக் கேட்கும் சென்றாயன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார்.

 

தொடர்ந்து சென்றாயன்-கயல்விழி இருவருக்கும் சக போட்டியாளர்கள் சந்தனம் தடவி வாழ்த்துக் கூறுவது போல காட்சிகள் உள்ளன.திருமணமாகி 5 வருடங்களுக்குப்பின், சென்றாயன் அப்பா ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.