WATCH VIDEO : 'இதுக்கு அப்புறம் ''பேட்ட'' வச்சா நான் எடுக்கவே மாட்டேன்'...ஓய்வு குறித்து கோலி பரபரப்பு பேச்சு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 11, 2019 08:32 PM

நான் ஓய்வு பெற்றுவிட்டால் திரும்பவும் பேட்டை கையில் எடுக்கமாட்டேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிடுவேன் என,ஓய்வு குறித்த கேள்விக்கு கோலி பதிலளித்துள்ளார்.

I won\'t \'hold the bat again after retirement says Virat Kohli

இந்திய கேப்டன் விராட் கோலி,அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தலை சிறந்த பேட்ஸ்மேனாக அசத்தி வருகிறார்.நடந்து முடிந்த ஆஸ்திரேலியவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று,72 ஆண்டு கால கனவை நிறைவேற்றி இந்திய அணி தான் மாஸ் என மீண்டும் நிரூபித்தார்.

இந்நிலையில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாட இருக்கிறது.அதற்கான செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கோலி, ஓய்வு பெறும் திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.அப்போது பேசிய கோலி ''நான் ஓய்வு பெற்றுவிட்டால் திரும்பவும் பேட்டை கையில் எடுக்கமாட்டேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிடுவேன்.ஒரு தடவை முடிவு செய்து விட்டால் அதை மாற்றி கொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.

மேலும் ஏ பி டி வில்லியர்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கலம் இருவரும் ஓய்வுக்கு பிறகு டி20 போட்டிகளில் ஆடுகிறார்கள். ஆனால், நான் ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் ஆடமாட்டேன்" என்றும் தெரிவித்தார்.

Tags : #VIRATKOHLI #BCCI #RETIREMENT