'நானும் தீவிர ''தல'' ரசிகை தான்'...ஆஸ்திரேலியாவில் தோனிக்கு சர்ப்ரைஸ்!வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 11, 2019 07:24 PM

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெற்றுள்ளார்.அதற்கான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற தோனியை காண,87 வயது பாட்டி ஒருவர் வந்து தோனிக்கு சர்ப்ரைஸ் அளித்தார்.

MS Dhoni\'s gesture for his 87-year old fan in Australia viral video

ஆஸ்திரேலியாவில் நடக்கும் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள்,தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.அப்போது எடித் நார் மன் என்ற 87 வயது மூதாட்டி மைதானத்திற்கு வந்திருந்தார்.அவர் தான் தோனியின் ஆட்டத்தை காண வந்திருப்பதாக தெரிவித்தார்.இதனையடுத்து அவரை சந்தித்த தோனி,மூதாட்டியிடம் மகிழ்ச்சியாக பேசி கொண்டிருந்தார்.

அப்போது நான் உங்களின் பெரிய ரசிகை என மூதாட்டி தோனியிடம் தெரிவித்தார்.இதனை சற்றும் எதிர்பாராத தோனி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.இருவரும் பேசி கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #MSDHONI #CRICKET #AUSTRALIA