'மறுபடியும் மோதி பாப்போம்'...தாய் மண்ணில் ஆஸ்திரேலியவுடன் மோத இருக்கும் இந்திய அணி'... அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 10, 2019 07:45 PM

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.இந்த போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது.

 

BCCI announces fixtures for home series against Australia

இந்தியக் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. பின்னர், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட தொடரை இந்திய அணி 2-1 என வென்று வரலாறு படைத்தது. இதனைத் தொடர்ந்து வரும்  ஜனவரி 12 முதல் 18 வரை 3 போட்டிகள் கொண்ட, ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. அதன் பின்பு ஜனவரி 23 முதல் பிப்ரவரி 10 வரை நியூசிலாந்தில் நடக்கும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

 

இதனையடுத்து பிப்ரவரி 24 முதல் மார்ச் 13 வரை 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோத இருக்கின்றன.இதற்கான அட்டவணையினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

 

இதில் சென்னையில் எந்த போட்டிகளும் நடைபெறாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.மேலும் டி20 போட்டிகள் இரவு 7 மணிக்கும் ஒருநாள் போட்டிகள் பகல் 1.30 மணிக்கும் ஆரம்பிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #BCCI #CRICKET #AUSTRALIA #2 T20IS & 5 ODIS