மஹத்தை நினைத்து வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளாதே... யாஷிகாவுக்கு மும்தாஜ் அட்வைஸ்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Aug 30, 2018 06:09 PM
Biggboss 2 Tamil: Mumtaj\'s advice to Yashika

பிக்பாஸ் வீட்டில் இருந்து மஹத் வெளியேறினாலும், அவரை மறக்க முடியாமல் யாஷிகா தவித்து வருகிறார். பெட்டில் படுத்துக்கொண்டு மஹத்தின் சட்டையைப் பார்த்து பீல் செய்கிறார்.அதைப்பார்க்கும் ஐஸ்வர்யா,யாஷிகாவின் கையைப்பிடித்து ஆறுதல் சொல்கிறார்.

 

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்கு வெளியில் மும்தாஜ்-யாஷிகா இருவரும் அமர்ந்திருக்கின்றனர். அப்போது மும்தாஜ் அவருக்கு அட்வைஸ் செய்கிறார். அவர் யாஷிகாவிடம், ''வெளியில மஹத் 3 வருஷம் ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்தான். இங்க வந்து 70 நாள்ல உன்கூட மூவ் ஆன் ஆகிட்டான்.வெளியில் சென்று மூவ் ஆன் ஆவது பெரிய விஷயமில்லை.

 

நாளை என்ன நடக்கப்போகிறது என யோசித்து இன்றைய நாளை கெடுத்துக் கொள்ளாதே. வெளியில் இந்த வாய்ப்பு கிடைக்காமல் நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என நினைத்துத்தான் எனது குடும்பத்தினரை கன்வின்ஸ் செய்து இங்கு வந்துள்ளேன்.உனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதை வீணடித்துக் கொள்ளாதே,'' என யாஷிகாவிடம் தெரிவித்தார்.