‘இதுல யாருடா என் அம்மா’.. குழம்பித் தவிக்கும் குழந்தை..வெச்சு செய்யும் ட்வின்ஸ்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 06, 2019 12:56 PM

உருவத் தோற்றத்தில் ஒரே மாதிரி இருக்கும் இரட்டையர்களை அவர்களுடனே இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் அடையாளம் கண்டுபிடிப்பது சிரமம்தான்.

Twin sisters- baby finds it difficult to identify real mother viral

என்னதான் விழிப்பாக இருந்தாலும் இரட்டையர்கள் பலர் நம்மை ஏமாற்றிவிடக்கூடும். ஆனால் சின்னச் சின்ன அடையாளங்களை வைத்து இருவரையும் வேறுபடுத்தி புரிந்துகொள்ள முடியும். பல நேரங்களில் இரட்டையர்கள் தன்னுடைய இரட்டை இணையரின் புகைப்படத்தை பார்த்து இது அவரா? நாமா? என்கிற அளவுக்கெல்லாம் சந்தேகம் அடைந்த கதைகள் உண்டு.

இரட்டையர்களை அடையாளம் கண்டுபிடிப்பதில் சில நேரங்களில் இரட்டையர்களுக்கே  கஷ்டம் இருக்கும் என்றால் நிகழ்கணத்தில் வாழும் குழந்தைகளுக்கும், அடிக்கடி மறந்துபோகும் பெரியவர்களுக்குமான நிலை என்னவாகும்?. நிச்சயம் பலரும் ஏமார்ந்துதான் போவார்கள்.  இரட்டையர்களே தாமாக முன்வந்து சொன்னால்தான் இன்னாரென்று புரியவரும்.

அப்படித்தான் இரட்டையர்களாக பிறந்து வளர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு பிறந்த குழந்தை, தன்னுடைய அம்மாவுடன் இரட்டையராக பிறந்த இன்னொரு பெண்ணை பார்த்து தன் அம்மா என நினைத்து குழம்பித் தவிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி சக்கை போடு போட்டு வருகிறது.

அந்த வீடியோவில் அம்மாவிடம் இருந்து அம்மாவின் இரட்டை சகோதரியிடம் செல்லும் அந்த குழந்தை இன்னொரு தன் அம்மாவைப் பார்த்து அழுது அவரிடம் செல்கிறது. அவர் குழந்தையை வாங்கிக் கொண்ட பிறகு மீண்டும் அம்மாவின் இரட்டை சகோதரியை பார்த்து மீண்டும், ‘இல்லை.. இல்லை இதுதான் என் அம்மா’ என்று முடிவுசெய்து அழுதுகொண்டே அவரிடம் பாய்கிறது. இப்படியே மாறி மாறி குழந்தை குழம்பித் தவிப்பதை சிரித்துக்கொண்டே இரட்டை சகோதரிகள் இருவரும் ரசிக்கின்றனர். #ஆமா இதுல யாரு உண்மையான அம்மா? ஞே!

 

Tags : #TWIN SISTERS #BABY #VIRALVIDEO