'என்ன விட்ருப்பா ப்ளீஸ்'.. கிரவுண்டில் தெறிச்சு ஓடும் தோனி..வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Feb 04, 2019 01:34 PM

இந்திய கிரிக்கெட் வீரர் சஹாலின் புதிய இணையதள நிகழ்ச்சி, கிரிக்கெட் உலகத்தில் பெருமளவில் வைரலான ஒன்றாக இருக்கிறது.

Chahal chasing Dhoni has surfaced on social media video goes viral

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. அந்த சமயம் ஃபேமஸாகத் தொடங்கிய சஹால் டிவி என்கிற நிகழ்ச்சி அதன் பிறகு கோலி உள்ளிட்ட பெரும் தலைகளின் பேராதரவோடும் இணையத்தில் வெற்றிநடைபோடத் தொடங்கியுள்ளது.

அதுவும் தற்போது நியூஸிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்துள்ள, 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி முழு தொடரையும் கைப்பற்றியிருக்கும் நிலையில், 5வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது இந்த போட்டியில் விளையாண்ட கிரிக்கெட் வீரர் தோனியை பேட்டி எடுக்க நினைத்திருக்கிறார் சஹால். இதனை அடுத்து தனது சஹால் டிவிக்காக தோனியை பேட்டி எடுக்க முனைந்துள்ளார் சஹால்.

ஆனால் பேட்டி கொடுக்கும் மனநிலையில் இல்லாததாலும், மிகவும் அயர்ச்சியாக இருந்ததாலும் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தல தோனி, மைதானத்திலேயே ‘என்ன விட்ரு ப்ளீஸ்’ என்கிறபடியாக விளையாட்டாக ஓடியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக நியூஸிலாந்துடனான 3வது ஒருநாள் போட்டியில் தோனி தசைப்பிடிப்பு காரணமாக விளையாடவில்லை. இந்த நிலையில் குழந்தை மனதோடு மைதானத்தில் சகவீரருடன் விளையாட்டாக ஓடிய தோனியின் செயல் பலரையும் கவர்ந்துள்ளது. அதன் பிறகு சஹால் தோனியை அவர் இஷ்டப்படி விட்டுவிட்டு பேட்டி எடுக்க அடுத்த வீரரைத் தேடத் தொடங்கினார்.

Tags : #BCCI #ICC #5THODI #MSDHONI #CHAHAL #VIRALVIDEO