கிரிக்கெட் வீரரின் நேர்மை குறித்த சர்ச்சை கருத்து கூறிய கேப்டனின் மனைவி!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Feb 01, 2019 07:44 PM

இலங்கை கிரிக்கெட் வீரர் திசரா பெரேராவைக் குறித்து மலிங்காவின் மனைவி சர்சைக்குரிய கருத்து கூறி அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Srilankan Cricketer Malinga’s wife Tanya Critics Thisara\'s move

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா கடந்த ஓராண்டாக அணியில் இடம்பெறாமல் இருந்துவந்தார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மலிங்கா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

மேலும் வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இவருக்கு முன்பாக டி20 போட்டிக்கு திசரா பெரேராவும், டெஸ்ட் போட்டிக்கு தினேஷ் சண்டிமாலும் கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் மலிங்காவின் மனைவி, திசரா பெரேரா குறித்து அவரது பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில் திசரா பெரேரா அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்ததாகவும், அவரிடன் திசரா பெரேரா உலகக் கோப்பையில் தன்னுடைய இடத்தை உறுதி செய்ய முயற்சிப்பதாகவும் சர்ச்சைக்குரியவாறு பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து திசரா பெரேரா இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கேப்டனின் மனைவியாக இருப்பவர் தன்னைப் பற்றி பொது வெளியில் இவ்வாறு கூறுவது மக்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்கிவிடும் என்றும் உடனடியாக கிரிக்கெட் வாரியம் தலையிட்டு இந்த பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Tags : #MALINGA #ODI #ICC #T20 #THISARAPERERA #SRILANKANCRICKETTEAM