உலகிலேயே சிறந்த யார்க்கர் பவுலர் இவர்தான்.. பும்ராவைப் புகழ்ந்த வாசிம் அக்ரம்!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 21, 2019 01:42 PM

உலகிலேயே தலை சிறந்த யார்க்கர் பவுலர் பும்ராதான், என பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும்  வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் புகழ்ந்து பேசியுள்ளார்.

Bumrah has the most effective yorker in world, says akram

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் வென்று வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன்முலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், அறிமுகமான வருடத்திலேயே அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியிலிருந்து பும்ராவிற்கு ஒய்வு அளிக்கப்பட்டது.மேலும் நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியிலிருந்தும் ஓய்வளிக்கப்பட்டது.

தற்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம்,பும்ராவைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வாசிம் அக்ரம் பும்ரா பற்றி ஒரு நிகழ்வில் பேசும்பொழுது, ‘யார்க்கர் பந்து வீசுவதில் சர்வதேச கிரிக்கெட் வீரர்களிலேயே பும்ராதான் தலை சிறந்தவர், அவர் பந்தை ஸ்விங் செய்யும் விதம் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விட வித்தியாசமாக இருக்கிறது’ என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

Tags : #JASPRIT BUMRAH #WASIM AKRAM #TEST #ICC #INDIA #PAKISTAN #T20 #NEW ZEALAND #YORKER #VIRAL #CRICKET #BCCI #TEAMINDIA