‘சுத்தி வர முடியாதா?’.. கண்ட்ரோலை இழந்த ‘கூல்’ தோனி.. வாங்கிக் கட்டிக்கொண்ட வீரர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 18, 2019 04:41 PM

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கள ஆக்ரோஷம் தற்போது பிரபலமாக உள்ளதுபோலவே, ஒரு சமயத்தின் முன்னாள் கேப்டன் தோனியின் மிஸ்டர் கூல் எனும் அடைமொழி பிரபலமானது.

Viral - MS Dhoni loses cool at khaleel during 2nd ODI

எது நடந்தாலும் கூல் கேப்டனாகவே தோனி அடையாளம் காணப்பட்டார்.  அந்த சமயங்களில் அவருக்கு டென்ஷன் கொடுக்கும் விதமாக பலதரப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனினும் பணிநிமித்தமான எதையும் கூலான தொனியில் ஹேண்டில் செய்வதே தோனியின் தனியான பாணியாக இருக்கும்.

ஆனால் அப்படிப்பட்டவரையே சற்று டென்ஷனாக பேச வைத்துள்ளார் கலீல் அஹமது. ஆம், கலீல் மீது கோபப்பட்ட தோனியின் வைரல் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அடிலெய்டில் நடந்த 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து ஆடும் பொருட்டு தோனி களத்தில் இருந்துள்ளார்.  அப்போது ஓவர்களுக்கு நடுவே இருந்த இடைவேளையின்போது, கலீல் அஹமது தண்ணீர் கொண்டு வந்துள்ளார்.

வந்தவர் தவறுதலாக அங்கிருந்த பிட்சில் கால் வைத்து நடந்து வந்துள்ளார். அதைப் பார்த்ததும் தோனி, ‘சுற்றித்தான் வந்தால் என்ன’என்று கோபமாக கேட்டுள்ளார். தோனியின் இந்த கள அக்கறை பலராலும் பாராட்டப்பட்டும் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டது. பின்னர் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கான சமவாய்ப்புக்கு உறுதுணையாக இருந்தார். 

இதனை அடுத்து மெல்போர்னில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே  3வது ஒருநாள் போட்டியில்தோனி 87 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார். இந்த போட்டியில்  2-1 என்கிற கணக்கில் இந்தியா முழுமையான வரலாற்று வெற்றியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #MSDHONI #CRICKET #AUSVIND #BCCI #ICC #ODI #TEAMINDIA