‘14 நாட்களுக்குள் உடற்பரிசோதனை’.. ஒருநாள் போட்டியில் பந்துவீசிய இந்திய வீரருக்கு கெடுபிடி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 13, 2019 04:09 PM

இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முறைகேடாக பந்துவீசியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அம்பாட்டி ராயுடுவுக்கு முக்கிய உடல் பரிசோதனை செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ODI INDvsAUS Ambati Rayudu reported for suspect bowling action

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு 2-1 என்கிற கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை புரிந்தது. முன்னதாக மெல்போர்ன் மைதானத்தில் நிகழ்ந்த போட்டியில் 37 வருட சாதனையையும், சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டி சமனில் முடிந்ததால், 72 வருட சாதனையையும் முறியடித்து இந்தியா கேப்டன் விராட் கோலியின் தலைமையில் மாபெரும் வெற்றியினை பெற்றது.

இதனை அடுத்து ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது இந்தியா. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடனான 2-வது ஒருநாள் போட்டியில் மோதுகிறது. முன்னதாக இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே சிட்னியில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர் அம்பாட்டி ராயுடுவின் மீது முறைகேடு புகார் எழுந்துள்ளதால், அடுத்த 14 நாட்களுக்குள் அவருக்கு முழு உடற்பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதுவரை அவர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், டிவி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா இருவரையும் பிசிசிஐ நீக்கம் செய்ததால், இவர்களுக்கு பதில், தமிழக வீரர்கள் விஜய் சங்கர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் விளையாட அழைக்கப்பட்டுள்ளனர்.

Tags : #ODI #INDVAUS #CRICKET #ABATIRAYUDU #BCCI