'தமிழக வீரருக்கு அடித்தது ஜாக்பாட்'...ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் வாய்ப்பு!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 14, 2019 12:29 PM

சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, கே.எல். ராகுல் ஆகியோருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர், சுப்மான் கில் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Hardik Pandya replaced an Vijay Shankar on Australia tour

பிரபல இயக்குனர் கரண் ஜோகர் நடத்தும் ‘காஃபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில்,பிரபல சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்பது வழக்கம்.இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டா் ஹா்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார்கள்.இந்நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து வரம்பு மீறி பேசியதாக கடும் சர்ச்சை வெடித்தது.

இந்நிலையில் பிரச்னை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து இருவரும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இரு வீரர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பதிலாக விளையாட தமிழக வீரர் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

Tags : #CRICKET #BCCI #KLRAHUL #HARDIKPANDYA #VIJAY SHANKAR