''தல தோனி''யின் உலக சாதனையை முறியடித்த வீரர்...விக்கெட் கீப்பிங்யில் புதிய சாதனை!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 15, 2019 01:37 PM

பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபாரஸ் அகமது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்,புதிய சாதனை ஒன்றை படைத்தது அசத்தியுள்ளார்.

Sarfaraz Ahmed sets new record, goes past MS Dhoni

பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வாண்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிற‌து.இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்த போது சர்ஃபராஸ் அகமது 10 கேட்ச்களை பிடித்து அசத்தினார்.இதன் மூலம் கேப்டனாக ஒரு விக்கெட் கீப்பர் அதிக கேட்களை பிடித்தவர் என்ற புதிய சாதனையை படைத்தார்.

இதற்கு முன் இந்தச் சாதனையை இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி இங்கிலாந்தின் அலெக் ஸ்டூவர்ட், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் ஆகியோர் 8 கேட்ச்களுடன் சம நிலையில் இருந்தனர்.தற்போது சர்ஃபராஸ் 10 கேட்ச்களை பிடித்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Tags : #CRICKET #PAKISTAN #MSDHONI #SARFARAZ AHMED