‘அது ஒரு கிளாஸிக் மொமண்ட்’.. அவர் மீது அபார நம்பிக்கை உள்ளது.. தல’யை புகழ்ந்த தளபதி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 16, 2019 06:40 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் இந்திய அணி விளையாடிய 2-வது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

\'Classic shot of MSDhoni\', says kohli after winning in ODI against Aus

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடிய டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில் வென்றது.  இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 298 ரன்களை குவிக்க, அடுத்து 299 ரன்கள்  என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் ரன்களை குவித்தனர். இதில் விராட் கோலி அடித்த சதமும், தோனி அடித்த அரை சதமும் வெற்றியை உறுதி செய்தன.

கடைசி ஓவரில் ‘தல’ தோனிக்கே உரிய அந்த  ‘தோனி ஸ்பெஷல்’ சிக்ஸரை அடித்தது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.  இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் ‘தளபதி’ விராட் கோலி, தோனியின் ஆட்டத்தை பற்றிய கமெண்டுகள் இணையத்தில் வைரலாக வந்த வண்ணம் உள்ளன.

அதன்படி, இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இந்த 2-வது ஒருநாள் போட்டியில் மகேந்திர சிங் தோனியின் ஆட்டம் அவருக்கே உண்டான தோனி கிளாஸிக் வகையை மீண்டும் நினைவுபடுத்தியது என்றும், அவருடைய உழைப்பு அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்தது மட்டுமல்லாமல், அவர் இந்த அணியின் தவிர்க்கமுடியாத அங்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை என்றும், ஆட்டத்தின் போக்கினை துல்லியமாக ஆய்வுசெய்து கணிக்கும் அபாரமான திறமை கொண்டவர் என்பதால்தான் ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச் சென்று, தானும் உடன் சென்று தேவைப்படும் இடங்களில் அடித்து ஸ்கோர் செய்வார் என்றும் அவர் மீது தனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.

Tags : #ODI #INDVAUS #2NDODI #VIRATKOHLI #MSDHONI #DHONICLASSICSHOT #CRICKET #INDIA #TEAMINDIA #BCCI