‘காதலியின் ஆசையை நிறைவேற்றுவாரா?’.. வைரல் புகைப்படத்தை வெளியிட்ட ரிஷப் பண்ட்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 18, 2019 02:55 PM

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களுள் ஒருவராக சமீபத்தில் களமிறங்கி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பிரபலமானவர் ரிஷப் பண்ட்.

Rishabh Pant Reveals his girlfriend through his Instagram goes viral

முன்னதாக டிம் பெய்னின் மனைவி மற்றும் குழந்தையுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டு, தான் ஒரு சிறந்த பேபிசிட்டர் என்று நிரூபித்து விளையாட்டு காட்டிய ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அடித்த சதம், இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தல’யுமான தோனிக்கு அடுத்தபடியாக சிறந்ததொரு விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருப்பார் என பிரபல கிரிக்கெட் வீரர்களின் ஒருமித்த பேராதரவினை பெற்ற ரிஷப் பண்ட்டுக்குதான், தினேஷ் கார்த்திக், சஹாவை விட அதிக வாய்ப்புகள் விக்கெட் கீப்பராக வழங்கப்படுகின்றன.

அப்படி ஒரு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த சமீபத்திய டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக நின்றுகொண்டிருந்தபோதுதான் ரிஷப் பண்டினை டிம் பெய்ன் தனது குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு வம்பிழுத்தார். அதன் பின்னரே ரிஷப் பண்ட் ஒரு சிறந்த பேபி சிட்டர் என்று புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட், தான் காதலிக்கும் பெண்ணின் வைரலான ஒளிப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இண்டீரியர் டிசைனராகவிருப்பதாக கூறப்படும் இஷா நீகி என்கிற பெயருடைய தன்னுடைய காதலியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார். காதலியின் ஆசைக்கு உறுதுணையாக ரிஷப் இருப்பார் என்று நம்பலாம்.

Tags : #RISHABHPANT #CRICKETER #INDIA #TEAMINDIA #BCCI #GIRLFRIEND #ISHANEGI #INSTAGRAM #VIRAL #PHOTO #LOVE