'இறுதியா இடம் கிடைச்சாச்சு'...இந்திய அணியில் இணையும் ஆல்ரவுண்டர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Jan 25, 2019 11:14 AM

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்ததால்,ஆஸ்திரேலிய தொடரின் போது அணியிலிருந்து நீக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் மீதான தடையினை நீக்கி பிசிசிஐ நேற்று உத்தரவிட்டது.இதனையடுத்து  ஹர்திக் பாண்ட்யா நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இணைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Hardik Pandya asked to join India squad in New Zealand

உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த விவகாரம் கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.இதனையடுத்து இடைக்கால குழுவை அமைத்து இந்த விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி விசாரணை அதிகாரியை உச்சநீதிமன்றம் அமைத்த பின்பு விசாரணை தொடங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இருவர் மீதான தடையினை நீக்கி பிசிசிஐ நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து ஹர்திக் பாண்ட்யா நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இணைவார் என்றும், ராகுல் இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிராக இந்தியா ஏ ஆடும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவர் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Tags : #BCCI #HARDIKPANDYA #KLRAHUL #CRICKET #NEW ZEALAND #ODI #T20