'இதே எண்ணத்தோட அங்க போகாதீங்க..அவுங்க உக்கிரமா இருப்பாங்க'.. கிரிக்கெட் பிரபலம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 21, 2019 06:43 PM

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, மிக இளம் வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரையும் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.

NewZealand will give tough fight, former cricketer warns TeamIndia

வரலாறு காணாத இந்த வெற்றி உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக கோலியின் தீவிரமும், மீண்டும் ஃபார்முக்கு வந்த தோனியின் பேட்டிங்கும் புதிய வீரர்களின் சின்சியரான உழைப்பும் தற்போதைய இந்திய அணியின் வெற்றிகளுக்கு மிகவும் உதவியிருந்தன.

இந்த சுற்றுப்பயணத்துக்குப் பின், ஆஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக நியூஸிலாந்து சென்றுள்ளது இந்திய அணி. அடுத்தடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் தங்களுக்குள் மோதவுள்ளன.

இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மதன் லால், கோலிக்கும் இந்திய அணிக்கும் நியூஸிலாந்தினை எதிர்கொள்வது பற்றிய எச்சரிக்கை டிப்ஸ்களை அறிவுரையாக கூறியுள்ளார். அதன்படி, ஆஸ்திரேலியாவில் அனுபவம் குறைந்த ஆஸ்திரேலிய இளம் வீரர்களை எதிர் கொண்டு, கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் நியூஸிலாந்து வீரர்கள் அப்படி அல்ல. அவர்களை எதிர்கொள்வது எளிதான காரியம் என்று எண்ண முடியாது என்று கூறியுள்ளார்.

அங்கு சிறந்த பவுலர்களும் பேட்ஸ்மேன்களும் இருப்பதோடு, சிறிய மைதானங்கள் என்பதால் சிக்ஸர், பவுண்டரிகளை அடித்து பறக்கவிடுவார்கள் அவர்கள், ஆகையால் அவர்களை எதிர்கொள்வது கடுமையான சவால்தான் என்று கூறிய மதன் லால், ஆனால் உலகக்கோப்பையை எதிர்கொள்வதற்கு முன்பாக இத்தகைய சவாலான அணியுடன் மோதுகிற அனுபவம் இந்திய அணிக்கு தேவை என்றும் அவர் பேசியுள்ளார். இதனிடையே  ஜனவரி 23-ஆம் தேதி நிகழவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் கலந்துகொள்வதற்காக நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய அணிக்கு ஆக்லாந்து விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : #NZVIND #TEAMINDIA #BCCI #VIRATKOHLI #MADANLAL