‘இந்திய அணியில் இடம் கிடைக்கலனா, இந்த வேலைக்குதான் போயிருப்பேன்: ஹர்பஜன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 22, 2019 04:44 PM

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பிஹைண்ட்வுட்ஸுக்கு அளித்த பிரத்யேக பேட்டி ட்ரெண்டிங்கில் உள்ளது. தனது இதயத்தின் அடியாழத்தில் இருந்து பலதரப்பட்ட உருக்கமான விஷயங்களை இந்த பேட்டியில் ஹர்பஜன் நேரடியாக கூறியுள்ளார். 

\'This was my plan, If i couldnt become cricketer\', Harbhajan Opens up

தனது இத்தனை வருடகால கிரிக்கெட் பயணத்தையும், குடும்ப விஷயங்களையும், எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் பகிர்ந்து கொண்ட ஹர்பஜன், இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்கவில்லையானால் வெளிநாடு சென்று வேலை பார்த்து தன் குடும்பத்தை பார்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்து வைத்திருந்ததாக கூறியுள்ளார்.

தான் மிகவும் சாதாரணமான நடுத்தர குடும்பத்தில் பிறந்ததாக கூறிய ஹர்பஜன், தனது 17-ஆம் வயதிலேயே, தான் இந்திய அணியிக்காக விளையாட ஆரம்பித்ததற்கு தன் தந்தை மிகவும் கடினமாக உழைத்ததுதான் காரணம் என்றும் தனது இந்த கனவை தன் குடும்பத்தார் முழுவதுமாக ஆதரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது ஆசைக்கு ஒரு பொழுதும் தன் தந்தை தடை சொன்னதே இல்லை என்றும் கூறியவர், இந்திய அணியில் நிலையான வீரராக முடிவு செய்து இப்பொழுதும் தன் குடும்பம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தன் வெற்றியை, பின்னாட்களில் பார்த்து மகிழ தனது தந்தை இல்லை என்பது வருத்தமாக இருந்தாலும், அவரின் விடாமுயற்சியால் இந்நிலைக்கு உயர்ந்துள்ளது பெருமையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags : #HARBHAJAN SINGH #EXCLUSIVE #INTERVIEW #TEAMINDIA #CRICKET