‘ஐபிஎல் தொடருக்கு முன் குணமாகி, அதில் களமிறங்குவேன்’, இந்திய வீரர் நம்பிக்கை!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 22, 2019 11:04 AM

காயத்திலிருந்து மீண்டுவருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிருத்வி ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

\'I will be fit before the IPL 2019\',Says indian cricketer prithvi shaw

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்தவர் பிருத்வி ஷா. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிருத்வி ஷா தேர்வாகியிருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட முடியாமல் பிருத்வி ஷா இந்தியா திரும்பினார்.

உடல்நலம் தேற, தீவிர பயிற்சி மேற்கொண்டுவரும் பிருத்வி ஷா, ஐபிஎல் தொடருக்கு முன்னராக, எப்படியாவது ’நான் மீண்டும் தேர்ந்து  வந்துவிடுவேன்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபற்றி பிருத்வி ஷா தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது, ‘பயிற்சி ஆட்டத்தில் பந்தை பிடிக்க முயன்ற போது எனது கணுக்கால் முழுவதும் மடங்கி காயம் ஏற்பட்டது. ஆனாலும் இரண்டாவது டெஸ்டில் விளையாட முயன்றேன். அப்போதும் வலி அதிகமானதால் தொடர்ந்து விளையாட முடியவில்லை’ என்று விளக்கினார். 

மேலும் பேசியவர், ஆஸ்திரேலிய மைதானத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் என்றும் இதனால் ஆஸ்திரேலியாவில் ஆட ஆவலுடன் இருந்ததாகவும் ஆனால் தனது காயத்தால் அது நிறைவேறாமல் போனதாகவும் வருந்தினார். இருந்தாலும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வென்றது தனக்கு  மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய பிருத்வி ஷா, தற்பொழுது காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். மேலும் ‘நான் ஐபிஎல் 2019 சீசன் தொடருக்கு முன்னதாகவே முழுவதுமாக குணமாகிவிடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது’ என்றும் தெரிவித்துள்ளார். 

Tags : #PRITHIVSHAW #IPL2019 #AUSVIND #CRICKET