‘என்னை மன்னிச்சிரு ஸ்ரீசாந்த்’.. மனமுருகிய ஹர்பஜன்.. EXCLUSIVE பேட்டி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 21, 2019 07:52 PM

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அண்மையில் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், தனது இதயத்தின் ஆழத்தில் இருந்து பலதரப்பட்ட உருக்கமான விஷயங்களை நேரடியாக கூறியுள்ளார்.  தனது இத்தனை வருடகால கிரிக்கெட் பயணத்தையும் குடும்ப விஷயங்களையும், எதார்த்தமாகவும், நகைச்சுவையாகவும் பகிர்ந்து கொண்ட ஹர்பஜன் சிங், இந்த பேட்டியில், தனக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையில் நடந்த உண்மைகளை கூறியுள்ளதோடு ஸ்ரீசாந்திடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Watch: Harbhajan\'s Emotional Apology to Sreesanth video goes viral

அதன்படி, ஊடகங்களில் தனக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையில் நடந்த பிரச்சனைகளை பலவிதமாக சித்தரித்துள்ளதாகவும், என்னவாக இருந்தாலும் அன்றைக்கு நடந்ததை நினைத்து தான் வருந்துவதாகவும் குறிப்பிட்டவர், ஸ்ரீசாந்த்திடம் மனமுருகி மன்னிப்பு கேட்பதாகவும் கூறி அனைவரையும் உருக வைத்துள்ளார். மேலும், ஸ்ரீசாந்த் மிகவும் திறமையான மற்றும் தகுதியுள்ள வீரர் என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 27 டெஸ்ட் 53 ஒருநாள் போட்டி மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாண்ட ஸ்ரீசாந்த் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்தவர். கடந்த 2008-ஆம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் யுவராஜ் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் யுவராஜின் அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் வீரர் ஸ்ரீசாந்த், எதிரணியில் இருந்த ஹர்பஜனை நெருங்கி ஏதோ சொல்ல, இருவருக்கும் உண்டான வாக்குவாதத்தால் ஹர்பஜன் ஸ்ரீசாந்தை ஓங்கி அறைந்தார்.

ஹர்பஜன் சிங்கை பொருத்தவரை, அந்த சம்பவத்துக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று நேரடியாகக் கூறியிருந்தார். இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து மனம் திறந்து அவர் அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதியாக ஸ்ரீசாந்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார் பலருக்கும் பிரியமான ‘பாஜி அண்ணா’ எனும் ஹர்பஜன் சிங்.

Tags : #HARBHAJAN SINGH #SREESANTH #IPL2008 #VIRAL #INTERVIEW