‘நா சொல்ற மாதிரி பால் போடு’.. ‘தல’ சொன்ன வைரல் ஐடியா.. பரவும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 23, 2019 06:50 PM

தோனி கொடுத்த ஐடியாவில் குல்தீப் யாதவ் நியூஸிலாந்து அணியின் கடைசி விக்கெட்டை ஸ்மார்ட்டாக எடுத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

MSDhoni smartly plotted the dismissal of New Zealand viral video

நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று மெக்லீன் மைதானத்தில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி, இந்திய பெளலர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்கமுடியாமல் 38 ஓவர்களில் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நியூஸிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் தரப்பில் குல்தீப் 4 விக்கெட்களையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 34.5 ஓவரில் 2 விக்கெட் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக இலக்கை அடைந்து வெற்றிபெற்றது. இந்திய அணியின் தரப்பில் தவான் 75 ரன்களும் கோலி 45 ரன்களும் எடுத்திருந்தனர்.

முன்னதாக நியூசிலாந்து அணியின் கடைசி விக்கெட்டை எடுப்பதற்காக, தோனி குல்தீபிடம் சில ஐடியாக்களை கூறினார். "போல்ட் கண்ணை மூடிக்கிட்டு அடிப்பார், நீ ரவுண்ட் பால் போடு" என தோனி பேசியது ஸ்டம்ப்பில் இருந்த மைக்கில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து குல்தீப் போட்ட அடுத்த பந்தில் போல்ட் அவுட்டாகிவிடுகிறார். தற்பொழுது இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #MSDHONI #KULDEEPYADAV #NZVIND #BCCI #ODI